Saturday, June 2, 2012

குமாரசாமி காமராஜர்
Kamaraj K
(15-7-1903 to 2-10-1975)


இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.

குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார்.
காமராசரின் வாழ்க்கை வரலாற்று சிறு குறிப்பு கேட்டு மகிழுங்கள்..[kamarajar life history]
Tamil Speech by Tamilaruvi Maniyan About Perunthalaivar Kamaraj.
பெருந்தலைவர் காமராஜ் அவர்களை பற்றிய தமிழருவி மணியன் அவர்களின் உரை.

காமராஜர் தாயார் இறந்த அன்று எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் Kamaraj Rare Photos











காமராஜர் தன் தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே, ஆனால் அவருக்கு இருந்த மனப்பக்குவமும் மனவுறுதியும் அசாத்தியமானது, அவர் தாயார் இறந்த அந்த துக்கமான நிகழ்வை கூட அவர் பக்குவமாகவே கையாண்டார், எந்த நிலையிலும் அவர் உணர்ச்சிவசப்படவில்லை.

அன்னை சிவகாமி அம்மாள் உடல்நலம் குன்றி இருந்தபோது காமராஜர் விருநகரில் தன் தாயாரோடு கூடவே இருந்து கவலையோடு அன்னையை பார்த்துக்கொண்டு இருந்தாராம், பின்பு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வர , அன்னையரை பிரிய மனம் இன்றி டெல்லி பயணம் மேற்கொண்டாராம், இதுவே அவர் அன்னையாரை கடைசியாக பார்த்தது.


அன்னையார் மறைந்த செய்தி கேட்டு விருதுநகர் வந்த காமராஜர் , தன் அன்னையார் அருகிலேயே அமர்ந்து இருந்தாராம். அச்சமயம் அவர் மிக பெரிய தேசிய தலைவராக இருந்த போதிலும் அவர் அன்னையாரின் இறுதிச்சடங்கை சாதரண முறையிலே ஆர்பாட்டமில்லாமல் நடத்தினார்.

இங்கே உள்ள படங்களில் மொட்டை அடித்து காணப்படும் இரண்டு பேர் காமராஜரின் தங்கை மகன்களான திரு.ஜவகர் மற்றும் திரு மோகன்.


காமராஜர் எவ்வளவு சாதாரண எளிமையான மனிதர் என்பதை இந்த படங்களின் பின்னணியில் தெரியும் காமராஜரின் விருதுநகர் வீட்டை பார்த்தாலே தெரியும்.

Kumarasami Kamaraj (Tamil: குமாரசாமி காமராஜ்) better known as K. Kamaraj (15 July 1903[1] – 2 October 1975[2]) was an Indian politician from Tamil Nadu widely acknowledged as the "Kingmaker" in Indian politics during the 1960s. He was the chief minister of Tamil Nadu during 1954-1963 and a Member of Parliament during 1952-1954 and 1969-1975. He was known for his simplicity and integrity.[1][3]
He was involved in the Indian independence movement.[4] As a high ranking office bearer of the Indian National Congress, he was instrumental in bringing to power two Prime Ministers, Lal Bahadur Shastri in 1964 and Indira Gandhi in 1966. In Tamil Nadu, his home state, he is still remembered for bringing school education to millions of the rural poor by introducing free education and the free Midday Meal Scheme during his tenure as chief minister. He was awarded India's highest civilian honour, the Bharat Ratna, posthumously in 1976.[5] The domestic terminal of the Chennai airport is named "Kamaraj Terminal", Chennai's Beach Road renamed "Kamarajar Salai", Bengaluru's North Parade Road as "K. Kamaraj Rd." and the Madurai Kamaraj University in his honour.[3][6]

Contents

Early life

Kamaraj was born on 15 July 1903 to Kumarasamy Nadar and Sivakami Ammal at Virudhunagar in Tamil Nadu. His parents were from a trading family. His father Kumarasamy Nadar, was a coconut merchant. Kamaraj was initially enrolled in the Enadhy Nayanar Vidyalaya elementary school, and later in high school Kshatriya Vidyalaya. Kamaraj's father died when he was six years old and his mother was forced to support her family by selling her jewellery. In 1914, Kamaraj dropped out of school to support his family.[7]

Start in politics and freedom struggle

Kamaraj joined as an apprentice in his maternal uncle Karuppiah's cloth shop after dropping out of school. He would slip out from the shop to join processions and attend public meetings addressed by orators like Dr. P. Varadarajulu Naidu. His relatives frowned upon Kamaraj's budding interest in politics. They sent him to Thiruvananthapuram to work at another uncle's timer shop.
At the age of 16, Kamaraj enrolled himself as full-time worker of the Congress Party. He invited speakers, organized meetings and collected funds for the party. He also participated in the march to Vedaranyam led by C. Rajagopalachari as part of the Salt Satyagraha of March 1930.
Kamaraj was arrested and sent to Alipore Jail in Calcutta for two years. He was 27 at the time of his arrest and was released in 1931 following the Gandhi-Irwin Pact. Kamaraj was implicated in the Virudhunagar bomb case two years later. Dr P. Varadarajulu Naidu and George Joseph argued on Kamaraj's behalf and proved the charges to be baseless. Kamaraj was arrested again in 1940 and sent to Vellore Central Prison while he was on his way to Wardha to get Gandhiji's approval for a list of satyagrahis.
While still in jail, Kamaraj was elected Chairman of the Municipal Council of Virudhunagar. Upon his release nine months later Kamaraj went straight to the Municipality and tendered his resignation from his post. He felt that "one should not accept any post to which one could not do full justice."
Kamaraj was arrested one more time in 1942 and sentenced to three years in the Amaravathi prison for spreading propaganda material for the Quit India movement initiated by Gandhiji. While in prison, Kamaraj read books and continued his self-education.
In 1945 C. Rajagopalachari tried to make a comeback within the Congress organisation in Tamil Nadu. He had the support of Gandhi and Sardar Patel, but the majority of members in the Tamil Nadu Congress Committee opposed him. A conference was held in Tirupparankundram in which the leadership should be elected. Chaos broke about during the conference as warring factions confronted each other. Pasumpon Muthuramalinga Thevar interrupted the disputes and passed a motion re-electing Kamaraj as the TNCC President.

With Satyamurti

Kamaraj's political guru and inspiration was S. Satyamurti, orator and parliamentarian. Satyamurti found in Kamaraj "an efficient, loyal, indefatigable worker and skillful organizer (p. 147, Pakshirajan)." Both developed a deep friendship and complemented each others' skills. In 1936, Satyamurti was elected President of the Provincial Congress Committee and he appointed Kamaraj the General Secretary. Four years later they swapped positions. The party base was strengthened under their leadership. So deep was Kamaraj's devotion to Satyamurti that when India gained independence, he first went to Satyamurti's house and hoisted the Indian flag there. On his election as Chief Minister of Tamil Nadu, Kamaraj went to Satyamurti's house and garlanded his photo and paid his respects to the leader's widow.

Chief Ministership

On 13 April 1954, K. Kamaraj became the Chief Minister of Madras Province. To everyone's surprise, Kamaraj nominated C. Subramaniam and M. Bhakthavatsalam, who had contested his leadership, to the newly formed cabinet. Never did Kamaraj aspire for any post in the party or in the administration. For him the posts were like a towel over the shoulder . Without any hesitation he chose to quit posts for the benefit of future generation .
Education
Kamaraj removed the family vocation based Hereditary Education Policy introduced by Rajaji. He reopened the 6000 schools closed by Rajaji government for financial reasons and also added 12000 more schools. The State made immense strides in education and trade. New schools were opened, so that poor rural students were to walk no more than 3 miles (4.8 km) to their nearest school. Better facilities were added to existing ones. No village remained without a primary school and no panchayat without a high school. Kamaraj strove to eradicate illiteracy by introducing free and compulsory education up to the eleventh standard. He introduced the Midday Meal Scheme to provide at least one meal per day to the lakhs of poor school children (first time in the world). He introduced free school uniforms to weed out caste, creed and class distinctions among young minds.
During British regime the education was only 7 percent. But in Kamaraj's period it was 37% . During Rajaji's period there were 12000 schools in the state. Whereas it was 27000 in the period of Kamaraj.
Kamaraj Statue in Marina Beach, Chennai depicting his contribution to education in the state.
Apart from increasing number of schools, steps were taken to improve standard of education. To improve the standards number of working day were increased from 180 to 200. Unnecessary holidays were reduced. Syllabus were prepared to give opportunity to various abilities.
Kamaraj and Sri Bishnuram Medhi (Governor) took efforts to start the IIT Madras in 1959.[8]
Agriculture
Major irrigation schemes were planned in Kamaraj's period . Lower Bhavani, Mani Muthar, Cauvery Delta, Aarani River, Vaigai Dam, Amaravathi, Sathanur, Krishnagiri, Pullambadi, Parambikulam and Neyyaru Dams were among them . The Lower Bhavani Dam in Coimbatore district was constructed with an expenditure of Rs 10/- Crores. 207,000 acres (840 km2) of land are under cultivation.
45,000 acres (180 km2) of land are benefited through Mettur canal of Salem. Another scheme was Krishnagiri in the same district. Vaigai, Sathanur facilitate to cultivate thousands of acres of lands in Madurai and North Arcot districts respectively. Rs 30 crores were planned to spend for Parambikulam River scheme in Kamaraj's period. This has helped for the development of Coimbatore district in agriculture field.
A number of dams were constructed under his rule:
    • Manimuthar Dam,
    • Vaigai Dam.
    • Aliyar Dam.
    • Sathanur Dam.
    • Krishnagiri Dam.

In 1957-61 1,628 Tanks were de-silted under Small Irrigation Scheme 2000 wells were digged with outlets. Long term loans with 25% subsidy were given to farmers. Apart from farmers who are having dry lands were given oil engines, electric pump sets on installment basis.
150 lakhs of acres of lands were cultivated during Kamaraj's period. One third of this i.e. 56 lakhs of acres of land got permanent watering facility.
Industrial Development
Industries with huge investments in crores of Rupees were started in his period. Neyveli Lignite Scheme, Raw photo film industry at The Nilgiris, Surgical instruments factory at Guindy, Sugar factories, Bi-Carbonates factories, Cement factories, Railway Coach factory at Perambur, Mettur paper industry were started in the period of Kamaraj. These are the back-bone for the development of the nation.
Other industries which were started his period are
Other
Many schemes were started to generate electricity like Kundah hydro power station, Ooty hydel power station and Neyveli thermal power station. During his period, Tamil Nadu was developing in all fronts.
Kamaraj remained Chief Minister for three consecutive terms, winning elections in 1957 and 1962. Kamaraj noticed that the Congress party was slowly losing its vigor. He came up with a plan which was called the "Kamaraj Plan". right|thumb|250px|Kamaraj statue at East Tambaram, Chennai On 2 October 1963, he resigned from the Tamil Nadu Chief Minister Post. He proposed that all senior Congress leaders should resign from their posts and devote all their energy to the re-vitalization of the Congress.
In 1963 he suggested to Nehru that senior Congress leaders should leave ministerial posts to take up organisational work. This suggestion came to be known as the Kamaraj Plan, which was designed primarily to dispel from the minds of Congressmen the lure for power, creating in its place a dedicated attachment to the objectives and policies of the organisation. Kamaraj was elected President, Indian National Congress, on 9 October 1963.
Well impressed by the achievements and acumen of Kamraj, Prime Minister Jawaharlal Nehru felt that his services were needed more at the national level. In a swift move he brought Kamaraj to Delhi as the President of the Indian National Congress. Nehru realised that if he had wide learning and vision, Kamaraj possessed enormous common sense and pragmatism.

Kamaraj's First Cabinet

Kamaraj's council of ministers during his first tenure as Chief Minister(13 April 1954 - 31 March 1957)[9]:
Minister Portfolios
K. Kamaraj Chief Minister, Public and Police in the Home Department
M. Bhaktavatsalam Agriculture, Forests, Fisheries, Cinchona, Rural Welfare, Community Projects, National Extension Scheme, Women’s Welfare, Industries and Labour and Animal Husbandry and Veterinary
C. Subramaniam Finance, Food, Education, Elections and Information and Publicity and Law (Courts and Prisons)
A. B. Shetty Medical and Public Health, Co-operation, Housing and Ex-servicemen.
M. A. Manickavelu Naicker Land Revenue, Commercial Taxes and Rural Development
Raja Sri Shanmuga Rajeswara Sethupathi Public Works, Accommodation Control, Engineering Colleges, Stationery and Printing including Establishment questions of the Stationery Department and the Government Press
B. Parameswaran Transport, Harijan Uplift, Hindu Religious Endowments, Registration and Prohibition
S. S. Ramasami Padayachi Local Administration
Changes
  • Following the States Reorganisation Act of 1956, A. B. Shetty quit the Ministry on 1 March 1956 and his portfolio was shared between the other ministers.

Kamaraj's Second Cabinet

Kamaraj's council of ministers during his second tenure as Chief Minister(1 April 1957 - 1 March 1962)[10]
Minister Portfolios
K. Kamaraj Chief Minister, Public, Planning and Development (including Local development Works, Women's Welfare, Community Projects and Rural Welfare), National Extension Scheme
M. Bhaktavatsalam Home
C. Subramaniam Finance
R. Venkataraman Industries
M. A. Manickavelu Naicker Revenue
P. Kakkan Works
V. Ramaiah Electricity
Lourdhammal Simon Local Administration

Kamaraj's Third Cabinet

Kamaraj's council of ministers during his third tenure as Chief Minister(3 March 1962 - 2 October 1963)[10][11][12]
Minister Portfolios
K. Kamaraj Chief Minister, Public, Planning and Development (including Local development Works, Women's Welfare, Community Projects and Rural Welfare), National Extension Scheme
M. Bhaktavatsalam Finance and Education
Jothi Venkatachalam Public Health
R. Venkataraman Revenue
S. M. Abdul Majid Local Administration
P. Kakkan Agriculture
V. Ramaiah Public Works and Revenue
N. Nallasenapathi Sarkarai Mandradiar Cooperation and Forests
G. Bhuvaraghan Publicity and Information

Electoral history

Year Post Constituency Party Opponent Election Result
1937 M.L.A Sattur INC Unopposed 1937 elections Won
1946 M.L.A Sattur-Aruppukottai INC Unopposed 1946 elections Won
1952 M.P Srivilliputtur INC G. D. Naidu Indian General Elections, 1951 Won
1954 M.L.A Gudiyatham INC V. K. Kothandaraman By Election Won
1957 M.L.A Sattur INC Jayarama Reddiar Madras legislative assembly election, 1957 Won
1962 M.L.A Sattur INC P. Ramamoorthy Madras legislative assembly election, 1962 Won
1967 M.L.A Virudhunagar INC P. Seenivasan Tamil Nadu state assembly election, 1967 Lost
1969 M.P Nagercoil INC M. Mathias By Election Won
1971 M.P Nagercoil INC (O) M. C. Balan Indian General Elections, 1971 Won

Leaving the congress

When the Congress split in 1969, Kamaraj became the leader of the INC (O) in Tamil Nadu. The party fared poorly in the 1971 elections. He remained as the leader of INC (O) till his death in 1975.

Advice to his ministers

Kamaraj gave a simple advice to his ministers, "Face the problem. Don't evade it. Find a solution, however small. People will be satisfied if you do something." Followed by him a number of Central and State ministers like Lal Bahadur Shastri, Jagjivan Ram, Satyendra Narayan Sinha, Morarji Desai and S.K. Patil followed suit and resigned from their posts. In 1964, Kamaraj was elected 'Congress President' and he successfully navigated the party and the nation through the stormy years following Nehru's death. Kamaraj’s political maturity came in full view when Nehru died in 1964. How he settled the succession issue for the Prime Ministership was amply proved by his choice of Lal Bahadur Shastri and Indira Gandhi in succession.

Death

Kamaraj memorial in chennai
Kamaraj memorial in chennai
On October 2, 1975, Kamaraj died in his sleep.[2] He was awarded India's highest civilian honour, the 'Bharat Ratna' posthumously in 1976.


Thursday, April 26, 2012

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

தொடக்ககால வாழ்க்கை

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.
தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.
ராசாசியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராசு சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.

அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக அரசியல்

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.

வித்தியாசமான அமைச்சரவை

காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
  • மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
  • அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)
  • அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.
காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

அகிலஇந்திய காங்கிரசு தலைமை

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

இறுதிக் காலம்

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

நினைவுச் சின்னங்கள்

Kamaraj samaathi.JPG
காமராசர் நினைவிடம், கிண்டி
தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பார்க்க

திரைப்படங்கள்

2004-ஆம் ஆண்டு காமராசு என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராசர் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்

  • "திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். -நேரு
  • “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.
  • “காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி
  • "சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்
  • "தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி
  • "காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதிரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது." -மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமசு